ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

மின் தடை

மின் தடை

Tiruppur District | திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள தேவனூர்புதூர் துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள தேவனூர்புதூர் துணை மின்நிலையத்தில் வியாழக் கிழமை (நவம்பர் 10) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

உடுமலை அடுத்துள்ள தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Must Read : திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு  ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை ஏற்படும் பகுதிகள்: தேவனூா்புதூா், செல்லப்பம்பாளையம், கரட்டூா், ராவணாபுரம்,

ஆண்டியூா், சின்னபொம்மன் சாளை, பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி , வல்லக்குண்டாபுரம்,

வலையபாளையம், எஸ்.நல்லூா், அா்த்த நாரிபாளையம், புங்கமுத்தூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் ஆா்.ஆா்தேவானந்த் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tiruppur