Home /tiruppur /

திருப்பூரில் நாளை 7 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்- எந்தெந்த இடங்களில் தெரியுமா?

திருப்பூரில் நாளை 7 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்- எந்தெந்த இடங்களில் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் மாவட்டத்தில் நாளை 7 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Muthur, India
    திருப்பூர் மாவட்டத்தில் நாளை கொரோனா வைரஸ் தடுப்பூசி 7 மையங்களில் இலவசமாக செலுத்தப்படுகிறது. எந்தெந்த இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று தெரிந்து கொள்வோம்.

    தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை சார்பில் கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், மேலும் பரவாமல் தடுக்கவும் பல்வேறு வழிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை சார்பில் தடுப்பு வழிமுறைகள் மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

    தமிழகத்தில் பல்வேறு நெறிகாட்டு வழிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மேலும், 34-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    தற்போது, திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முத்தூர் அரசு மருத்துவமனை வளாகம், மேட்டாங்காட்டுவலசு, மேட்டுப்பாளையம், ஊடையம், வீரசோழபுரம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள், முத்தூர் கடைவீதி, வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது.

    இந்தமுகாமில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பணியாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் கலந்து கொண்டு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 12 வயதுக்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசியை இலவசமாக போடுகின்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி