ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்  தெரியுமா? 

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்  தெரியுமா? 

மின்தடை பகுதிகள் அறிவிப்பு

மின்தடை பகுதிகள் அறிவிப்பு

Tiruppur Power Cut | திருப்பூர் மாவட்டம் அருள்புரம் துணைமின் நிலையத்தில் நாளை  (சனிகிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் அருள்புரம் துணைமின் நிலையத்தில் நாளை (அக்டோபர் 29ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : காந்தளூர் அருவி முதல் அமராவதி அணை வரை.. உடுமலையை சுற்றி மட்டும் இத்தனை சுற்றுலா தலங்களா?

அதன்படி. காலை 9 மணி முதல் மாலை5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அருள்புரம், தண்ணீா்பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகா், குங்குமபாளையம், கவுண்டம்பாளையம், உப்பிலிபாளையம், அண்ணாநகா், லட்சுமி நகா் ஆகிய இடங்கிளல் மின்தடை செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, சென்னிமலைப்பாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், செந்தூரன்காலனி, குன்னாங்கல்பாளையம், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ, திருமலை நகா், அய்யாவு நகா், நொச்சிபாளையம், நொச்சிபாளையம் வாய்க்கால்மேடு, சிந்து காா்டன், சரஸ்வதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது என செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tiruppur