ஹோம் /திருப்பூர் /

தாராபுரம் ஐடிஐயில் 2 பயிற்றுநர் காலிப் பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

தாராபுரம் ஐடிஐயில் 2 பயிற்றுநர் காலிப் பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலிப் பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், தற்காலிகமாக இரண்டு முழுநேர ஒப்பந்த பயிற்றுநர் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டள்ளன. இதற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

  1. டூல் அண்டு டைமேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் /சீர் மரபினர். முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிகிரி/ டிப்ளமோ மற்றும் என்.டி.சி. டூல் அண்டுடை மேக்கர் தொழிற் பிரிவு (பிடி. ஜே&எப்) கல்வித் தகுதி அவசியமாகிறது.

  2. வயர்மேன் தொழிற்பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

  இதற்கு எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் டிகிரி/ டிப்ளமோ மற்றும் என்.டி.சி வயர்மேன் தொழிற்பிரிவு கல்வித் தகுதி ஆகும். என்.டி.சி ஆக இருப்பின் 3 வருட தொழிற்சாலை அனுபவம், என்.ஏ.சி ஆக இருப்பின் இரண்டு வருட தொழிற்சாலை அனுபவமும் அதே தொழிற் பிரிவில் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு படித்த பின்னர் ஐடிஐ முடித்தவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 34 வரை ஆகும்.

  12ம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ.முடித்தவர்கள் டிப்ளமா, டிகிரி முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. தகுதியான தற்காலிக ஒப்பந்த பயிற்றுநருக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

  தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களின் நகல் உடன் தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தாராபுரம்-638 657 என்ற முகவரிக்கு வரும் 30.8.2022ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Tiruppur