Home /tiruppur /

Tiruppur | மூலனூரில் ரூ.4 கோடிக்கு ஏலம் போன பருத்தி

Tiruppur | மூலனூரில் ரூ.4 கோடிக்கு ஏலம் போன பருத்தி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்த ஏலத்தில், கோவை, திருப்பூா்,  ஈரோடு, திருச்சிச் , கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1,126 பேர் பங்கேற்றனர். அவர்கள் கொண்டு 10,890 மூட்டைகளில்   3,560 குவிண்டால் பருத்தியை கொண்டு வந்திருந்தினர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலைச் செயலாளா் ஆா்.பாலச்சந்திரன் தலைமையில் வெள்ளகோவில் அடுத்துள்ள மூலனூர் ஒழுங்முறை விற்பனை கூடத்தில், ரூ.3.95 கோடிக்கு பருத்தி ஏலம் போனதாக நடந்தாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவக்குமாா் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் வட்டம் மூலனூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வெள்ளிக்கிழமைகளில் பருத்தி ஏலம் நடக்கிறது. இந்த ஏலத்தில், கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1,126 பேர் பங்கேற்றனர். அவர்கள் 10,890 மூட்டைகளில் 3,560 குவிண்டால் பருத்தியை கொண்டு வந்திருந்தினர்.

    பருத்தி குவிண்டால் ரூ.9,850 முதல் ரூ.12,522 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.11, 650. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.3.95 கோடிக்கு ஏலம் போனது. இதில், திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 22 வணிகர்கள் பங்கேற்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி