Home /tiruppur /

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் ரூ.3.55 கோடிக்கு பருத்தி ஏலம்.!

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் ரூ.3.55 கோடிக்கு பருத்தி ஏலம்.!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.55 கோடிக்கு பருத்தி  ஏலம் போனது. 

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.55 கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில், கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்னர். அவர்களில் 1,080 பேர் 10,058 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 3,272 குவிண்டாலாகும்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 18 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். பருத்தி விலை குவிண்டால் 8,550 ரூபாய் முதல் 11,802 ரூபாய் வரை விற்பனையானது. சராசரி விலை 10,650 ரூபாய் ஆகும்.

    ஒட்டு மொத்தமாக தொகை 3.55 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலைச் செயலாளா் ஆா்.ஆா்பாலச்சந்திரன், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் தெரிவித்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி