Home /tiruppur /

திருப்பூர் மாநகரில் செப்.18 -ல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.!

திருப்பூர் மாநகரில் செப்.18 -ல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

TIRUPPUR : திருப்பூர் மாநகரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 18) நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
திருப்பூர் மாநகரில் 37ஆவது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 18) நடைபெறுகிறது. இதை தவறாமல் பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

திருப்பூர் மாநகரில் 37ஆவது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 7 மணி வரையில் நடைபெறுகிறது. திருப்பூர் மாநகரில் 12 வயது முதல் 14 வயது வரையிலான 31,778 சிறார்கள், 15 முதல் 18 வயது வரையிலான 42,300 இளம் சிறார்கள், 18 வயதுக்கு மேற்பட்ட 8,57,420 பேர் என மொத்தம் 9,41,498 பேர் உள்ளனர்.

இதில், தற்போது வரையில் 8,14,972 பேருக்கு முதல் தவணையும், 5,28,984 பேருக்கு இரண்டாவது தவணையும், 51,987 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திருப்பூரில் தாய் - சேய் நலம் காக்க புதிய திட்டம் அறிமுகம் 

மேலும், 1,25,525 பேருக்கு முதவ் தவணையும், 1.85,988 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. ஆகவே, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாம் மூலமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இவக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில், இரு தவணை தடுப்பூசிகள் செலுத்தி 5 மாதம் அல்லது 26 வாரம் நிறைவடைந்த நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆகவே, திருப்பூர் மாநகரில் உள்ள அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி