நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பெரியார் பல்கலை கழகம் இணைந்து நடத்திய சாகச முகாம் சேலம், ஏற்காடு மலைப்பகுதியில் நான்கு நாட்கள் ( 13.07.22 முதல் 16.07.22 ) நடைபெற்றது. இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை கழகங்களில் இருந்து மொத்தம் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கோவை பாரதியார் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலிருந்து 12 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு சாகச முகாமிற்கு சென்றனர்.
இதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு -2 மாணவர்கள் ரத்தின கணேஷ் மற்றும் சுகில் ஆனந்த் தேர்வாகி இருந்தனர். இருவரும் இளங்கலை வேதியியல் துறை இறுதியாண்டு படிக்கின்றனர். இருவரும் பாரதியார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலிருந்து தேர்வான அரசு கல்லூரி மாணவர்கள் என்ற பெருமை உள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்திலிருந்து தேர்வான ஒரே மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முகாமில் மாணவ, மாணவிகளுக்கு சாகச பயிற்சி, நெகிழி விழிப்புணர்வு மற்றும் சுத்தம் செய்தல், மலையேற்ற பயிற்சி, காய்கறி தோட்டம் அமைத்தல், கலை நிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு போன்ற நிகழ்சிகள் நடைபெற்றன.
இவ்விரண்டு மாணவர்கள் குறித்து சிக்கண்ணா கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், “இது அரசுக் கல்லூரிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார். மேலும் ஆறு வருடத்தில் 1,246 நிகழ்வுகளை எம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் நடத்தி இருக்கிறது. தமிழகத்தில் யாரும் இச்சாதனையை செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.
அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கூறுகையில்:- "மாணவன் ரத்தினகணேஷ் மற்றும் சுகில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மாணவர் ரத்தினகணேஷின் தாய் கட்டிட வேலை செய்து இவரை படிக்க வைத்து வந்துள்ளார். ஆனால் முழு பொறுப்பையும் தனது தாய் தலையில் சுமத்தாமல் கல்லூரி நாட்கள் போக விடுமுறை நாட்களில் பகுதிநேர வேலைகளை செய்து தனக்கான செலவுகளை இம்மானவனே பார்த்து கொள்கிறார்.
சிக்கண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் செயலாளராக உள்ள ரத்தினகனேஷ் மற்றும் சுகில் படிப்பில் சிறு ஆர்வமும் குறையாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையோடு நாட்டு நல பணி திட்டத்தில் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பான சேவையை வழங்கி வந்துள்ளார். ரத்ததான முகாம் ,கொரோனா தடுப்பூசி முகம் ,தெருக்களில் விழிப்புணர்வு நாடகம், ஆடல், பாடல் என அனைத்திலும் மற்ற மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது அரசு கல்லூரி ஆசிரியராக பெருமையாக உள்ளது".என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மாணவர்கள் வறுமையை காரணம் காட்டி திறமையை ஒதுக்க கூடாது என்றும், இம்மாதிரியான மாணவர்களுக்கு அரசாங்கம் மேலும் சிறப்பு சலுகைகளை தர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைப்பதாக அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruppur