Home /tiruppur /

திருப்பூர் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை 

திருப்பூர் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை 

திருமூர்த்தி மலையில் வெள்ளம்

திருமூர்த்தி மலையில் வெள்ளம்

திருப்பூர் திருமூர்த்தி பஞ்சலிங்க அருவில் வெள்ளம் காரணமாக குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    திருப்பூர் மாவட்டத்தில், அதிகளவில் மழை பெய்துள்ளதால், திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திரூமூர்த்தி பஞ்சலிங்க அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமணலிங்கேஸ்வரர் கோயிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

    அதேபோல, திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலையையொட்டி உள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

    அதனால், திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது.

    வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர் வரத்து ஏற்படுகிறது. வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது. இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் நறுமணத்தையும் அளிக்கிறது.

    அருவியில் குளிப்பதால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு வருவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்த சூழலில் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மாலை 6 மணியளவில் பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி வெள்ளம் கொட்டியது. அந்த தண்ணீர் அடிவாரப் பகுதியில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குன்று, சப்தகன்னிமார் கோவில், விநாயகர், சுப்பிரமணியர் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.

    அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் மற்றும் விநாயகர் கோவில் உண்டியலை பாதுகாக்கும் வகையில் நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பைகள் கொண்டு கட்டியிருந்தனர். மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதனால், பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி