Home /tiruppur /

விவசாயிகள் பிரதமரின் நிதி பெறத் தேவையான ஆவணங்கள் என்ன?

விவசாயிகள் பிரதமரின் நிதி பெறத் தேவையான ஆவணங்கள் என்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பிரதமர் கிசான் சம்தான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை பெறுவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பிரதமரின் நிதி உதவியை பெற மீண்டும் தங்களின் ஆவணங்களை ஆன்லைன் வாயிலாகவும், அந்த பகுதிகளில் உள்ள வேளாண் மைங்களிலும் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார், வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் அசல்களை சரிபார்த்து, பதிவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், ஊக்க தொகை அவர்களின் கணக்கில் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு சார்பில், விவசாயிகளுக்க ஆண்டுக்கு 3 தவணையாக 6,000 ரூபாய் பிரித்து வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது. இந்தத் தொகை பிரமந்திரியின் கிசான் சம்தான் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

    தங்கள் பதிவினை புதுப்பித்தல் மூலம் தாங்கள் தொடர்ந்து இந்த நிதியை பெற இயலும். புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும். தங்களது பதிவினை புதுப்பிக்க ஆதார் எண், வங்கி கணக்கு எண், நில உடமை ஆவணங்கள் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண்(அடங்கல் தேவையில்லை) எடுத்து சென்று பொது சேவை மையங்களில் உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    வங்கி கணக்குடன் ஆதார் எண் மொபைல் எண் இணைத்திருக்க வேண்டும். இதுவரை இணைக்காதவர்கள் தற்பொழுது இணைத்துக்கொள்ளலாம். பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ளது.

    தனியார் பொது சேவை மையங்களிலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மனுதாரர் பெயரில் சிட்டா இருக்க வேண்டும். கூட்டுபட்டாவாகவும் இருக்கலாம். குத்தகை போக்கிய நிலங்கள் பதிவு புதுப்பிக்க இயலாது. மனுதாரர் பதிவை புதுப்பிக்க பொது சேவை மையங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டும். ஒருவர் பெயரில் இருப்பதை மற்றவர்கள் புதுப்பிக்க இயலாது என்று அவிநாசி வட்டார வேளாண்மை உதவி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி