Home /tiruppur /

திருப்பூர் மாவட்டத்தில் யூரியா, உரம் இருப்பு நிலவரம் - வேளாண்துறை தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் யூரியா, உரம் இருப்பு நிலவரம் - வேளாண்துறை தகவல்

விவசாயிகள்

விவசாயிகள்

Tiruppur | திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் சாகுபடி தொடங்க இருப்பதால் 532 டன் யூரியா உரம் கொள்முதல் செய்து, 1,778 டன் அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி திருப்பூர் மாவட்டத்தில், ‘ராபி’ பருவத்தில் வேளாண் பணிகளை தொடங்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், பயிர் சாகுபடி தொடங்க உள்ள நிலையில், போதுமான அளவு உரம் மற்றும் விதைகளை தயார் நிலையில் வைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    நடப்பு பருவத்துக்கு தேவையான, யூரியா உரம், ரயில் மூலம் 532 டன் அளவுக்கு திருப்பூர் மாவட்டத்திற்கு வந்தடைந்துள்ளது. தனியார் உரக்கடை மற்றும் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, உரம் விற்பனை நடக்கும் என வேளாண்துறை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், வேளாண் இணை இயக்குனர் தெரிவித்திருப்பதாவது: வரப்பெற்றுள்ள உரங்களுடன், மாவட்டத்தில், யூரியா - 1,778 டன், டிஏபி -1, 217 டன், பொட்டாஷ் உரம் - 935 டன், காம்ப்ளக்ஸ் உரம் - 4,626 டன், சூப்பர் பாஸ்பேட் - 650 டன் அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரத்தின் அதிகபட்ச விலையை, கடையின் முன் எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    Also Read : ரூ.1,60,000 மானியம் அறிவிப்பு- திருப்பூர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

    விற்பனை ரசீதில், விவசாயிகளின் கையொப்பம் பெற்று உரம் வழங்க வேண்டும் என்றும், பாயின்ட் ஆப் சேல் கருவி வாயிலாக மட்டுமே உரம் விற்கப்பட வேண்டும் எனவும் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வது, அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைத்திருப்பது போன்ற நடைமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டு மெனவும் விற்பனையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    உரம் வாங்கும் விவசாயிகளிடம், மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கக்கூடாது. மீறினால் உரக்கட்டுப்பாடு விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    விவசாயிகள், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்தலாம். திருப்பூர் மற்றும் பொங்கலுார் மண் பரிசோதனை நிலையத்தில், மாதிரி மண் பரிசோதனை செய்து, பரிந்துரைக்கும் உரங்களை பயன்டுத்தி செலவுகளை கட்டுப்படுத்தலாம் எனறு அவர் தெரிவித்துள்ளார்.
    First published:

    Tags: Tiruppur

    அடுத்த செய்தி