ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - உங்க ஏரியா இருக்கா?

திருப்பூர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - உங்க ஏரியா இருக்கா?

மின் தடை

மின் தடை

Tiruppur District | திருப்பூர் மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) காளப்பட்டி, ஊத்துக்குளி, செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பணிகள் நடப்பதால், இந்த பகுதிகளில் மட்டும் மின் தடை ஏற்படுகிறது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) காளப்பட்டி, ஊத்துக்குளி, செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், இந்த பகுதிகளில் மட்டும் மின் தடை ஏற்படுகிறது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : தமிழ்நாட்டின் ஸ்பா - குற்றாலம் மெயின் அருவியின் சிறப்புகள் தெரியுமா?

இதன்படி நாளை கீழ் கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது செயற்பொறியாளர் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

மின் தடை ஏற்படும் இடங்கள்:

ஊத்துக்குளி:

ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.ஆா்எஸ், வி.ஜி. புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்ப்பாளையம், பி.வி.ஆா்.ஆா்பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம்,

கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.ஆா்கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலசு, வயக்காட்டு புதூா்.

செங்கப்பள்ளி துணைமின் நிலையம்:

செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடாபாளையம், பள்ளபாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாளபதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு, செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவ்வாறு மின் வாரியம் சார்பில் மின் தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tiruppur