ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்.. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க

திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்.. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க

மின் தடை

மின் தடை

Tirupur News: திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலூர், வீரபாண்டி  ஆகிய துணை மின் நிலையங்களில் வெள்ளிக் கிழமை ( நாளை)  மின் தடை  செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruppur, India

  திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலூர், வீரபாண்டி ஆகிய துணை மின் நிலையங்களில் வெள்ளிக் கிழமை ( நாளை) மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  கீழ்கண்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் தடை ஏற்படும் இடங்கள்:

  பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி, உகாயனூர், என்.என். புதூர், காங்கேயம்பாளையம், ஓலப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம் புதூர்.

  மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் தடை ஏற்படும் இடங்கள்:

  குறிஞ்சிநகர், ஆலங்காடு, வீரபாண்டிபிரிவு, வீரபாண்டி ரோடு, புளியங்காடு, ஜே.ஜே.நகர், எம்.பி.எஸ்.முத்துநகர், சவுடேஸ்வரி நகர், கிருஷ்ணாநகர், லட்சுமிநகர் கார்டன் கிழக்கு .

  இவ்வாறு மின் வாரிய அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Local News, Powercut, Tiruppur