ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

திருப்பூரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

குடிநீர் விநியோகம் நிறுத்தம்

குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Tiruppur | திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 2வது குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகிப்படும் குடிநீர் நாளை (30ம் தேதி) நிறுத்தப்படும் என்று மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 2வது குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகிப்படும் குடிநீர் நாளை 30ம் தேதி நிறுத்தப்படும் என்று மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகராட்சி பகுதிகளில் 2வது குடிநீர் திட்டத்தின்படி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின் வாரியத்தின் சார்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் 2வது குடிநீர் திட்ட குழாய்களில் மின் பராமரிப்புகள் செய்யப்படுகிறது.

இதனால் 2வது குடிநீா் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைப்படும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் இந்த 1வது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண்கள், 1, 13, 14, 3வது மண்டலத்துக்கு உள்பட்ட 44, 45, 50, 51, மற்றும் 4வது மண்டலத்துக்கு உள்பட்ட 52, 55 ஆகிய வாா்டுகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதையும் படிங்க : பக்தர்களின் கனவில் தோன்றும் முருகப்பெருமான் - சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் உத்தரவு பெட்டி அதிசயங்கள்..!

அதே வேளையில், வரும் திங்கள் கிழமை முதல் மேற்கண்ட பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை பொதுமக்களுக்கு குடிநீர் தேவை இருப்பின் அப்போது சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள குடிநீரை தேவையில்லாமல் வீணாக்க வேண்டாம் என்றும் நகராட்சி அதிகாரிகள் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tiruppur