ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு

திருப்பூரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு

குடிநீர் நிறுத்தம்

குடிநீர் நிறுத்தம்

Tiruppur District | திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 2வது குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகிப்படும் குடிநீர் நாளை (10ஆம் தேதி) நிறுத்தப்படும் என்று மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 2வது குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகிப்படும் குடிநீர் நாளை (10ஆம் தேதி) நிறுத்தப்படும் என்று மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2ஆவது குடிநீா் திட்டத்தின் படி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் மராமத்து மற்றும் சீரமைப்புப்பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.

இதனால் 2ஆவது குடிநீா் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைப்படும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1-க்கு உட்பட்ட வார்டு 1, 13, 14 மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு 44, 45, 50, 51 மற்றும் மண்டலம் 4-க்கு உட்பட்ட வார்டு 52, 55 ஆகிய பகுதிகளில் நாளை மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

Must Read : கோவை குருந்தமலையில் உருவான ஹிட் திரைப்படங்களின் லிஸ்ட்- மனதை கொள்ளை கொள்ளும் இடம்!

அதே வேளையில், வரும் வெள்ளிக் கிழமை முதல் மேற்கண்ட பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன்படி நாளை பொது மக்களுக்கு குடிநீர் தேவை இருப்பின் அப்போது சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள குடிநீரை தேவையில்லாமல் வீணாக்க வேண்டாம் என்றும் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Drinking water, Local News, Tiruppur