ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Tiruppur District | திருப்பூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 22) மின் தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரத்தை மின் வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம், பழையகோட்டை, பல்லடம் ஆகிய துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை (வெவ்வாய் கிழமை) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஓலப்பாளையம் துணை மின் நிலையம்:

ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம்,

செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம்,

முருகன்காட்டுவலசு.

பழையகோட்டை துணை மின் நிலையம்:

பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.

Must Read : த்ரில் அனுபவம்... சில்லென்று கொட்டும் அருவி - குளித்து மகிழ கோவை குற்றாலம் வாங்க!

காடையூா் துணை மின் நிலையம்:

காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், பொன்னங்காளிவலசு,

பல்லடம் துணை மின் நிலையம்:

சாலைப்புதூா், செஞ்சேரிபுத்தூா், எஸ்.பி.வடுகபாளையம், சின்னப்புதூா், ஜல்லிபட்டி, கம்மாளபட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், நந்திபுரம், மண்ணாம்பாளையம், வாவிபாளையம், வரப்பாளையம்,சேத்தம்பள்ளி, எஸ்.அய்யம்பாளையம்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tiruppur