முகப்பு /செய்தி /திருப்பூர் / திருப்பூரில் பஞ்சர் ஒட்டும் தொழிலில் அசத்தும் பெண்..!

திருப்பூரில் பஞ்சர் ஒட்டும் தொழிலில் அசத்தும் பெண்..!

மகாலட்சுமி

மகாலட்சுமி

Tiruppur News : திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆண்களுக்கு நிகராக பஞ்சர் ஒட்டி அசத்தும் பெண்மணி..

  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்னப்பாப்பனூத்து பிரிவு பகுதியில் வசித்து வருபவர்கள் பாலதண்டபாணி அவரது மனைவி மகாலட்சுமி.. மகாலட்சுமி, பாலதண்டபாணி ஆகிய இருவருமே சில ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்த நிலையில் திடீரென அந்த நிறுவனம் முடங்கவே தனக்கு தெரிந்த சொந்த தொழிலான வாகனங்களுக்கு பஞ்சர் போடும் தொழிலை துவங்கி உள்ளார் பாலதண்டபாணி..

கணவருக்கு உதவியாக தானும் செயல்பட்டு வந்துள்ளார் மனைவி மகாலட்சுமி. சிறிது காலங்களில் கணவரது உதவியோடு இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கும் பஞ்சர் ஒட்ட கற்றுக் கொண்டுள்ளார் அவர் ..

பின்னர் தாமாகவே யாரது உதவி இல்லாமல் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்கும் பஞ்சர் போடும் வேலையில் கற்றுத் தேர்ந்து கடந்த 14 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருவதாக மகாலட்சுமி தெரிவிக்கின்றார்..

இதோடு மட்டுமல்லாது போனில் பஞ்சர் தொடர்பாக தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று பஞ்சர் ஒட்டும் அளவிற்கு இப்பகுதியில் பிரபலம் அடைந்துள்ளார் மகாலட்சுமி..

மேலும் படிக்க... நெல்லையில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்..

ஆண்கள் மட்டுமே செய்து வந்த கடினமான இந்த தொழிலை அசால்டாக செய்வதோடு, தனக்கு இதில் குடும்பத்தை நடத்த போதுமான வருமானம் கிடைப்பதாகவும், இந்த தொழிலில் தமக்கு பெரிய அளவில் எந்த ஒரு சிரமமும் இல்லை எனவும் ஆண்களுக்கான தொழில் என்று எதுவும் இல்லை. அனைத்து பெண்களும் முன்னேறி முன்னே வரலாம். பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதிக்கலாம் எனவும் தெரிவிக்கின்றார் இந்த தன்னம்பிக்கை பெண் மகாலட்சுமி..

செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி

First published:

Tags: Tiruppur, Women achievers