Home /tiruppur /

திருப்பூர் மாவட்ட வணிகர்களுக்கு குட்நியூஸ் : ரூ.21,630 கோடி கடன் வழங்க இலக்கு

திருப்பூர் மாவட்ட வணிகர்களுக்கு குட்நியூஸ் : ரூ.21,630 கோடி கடன் வழங்க இலக்கு

திருப்பூரில் நடப்பு நிதியாண்டில் ரூ.21,630 கோடி கடன் வழங்க இலக்கு

திருப்பூரில் நடப்பு நிதியாண்டில் ரூ.21,630 கோடி கடன் வழங்க இலக்கு

TIRUPPUR : திருப்பூர் மாவட்டத்தில் வரும் நடப்பு ஆண்டில் ரூ.21,630 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
திருப்பூர் மாவட்ட வங்கியாளர்கள் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் திருப்பூர் ஆட்சியர் வினீத் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2022-23 ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

பின்னர் ஆட்சியர் வினீத், திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் ஆண்டுதோறும் ஆண்டுக்கடன் திட்டம் வெளியிடுவது போல இந்த ஆண்டு கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து வங்கிகளும் இணைந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட வேண்டும்.

முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.21,630 கோடியாகும். இதில் வேளாண்மை துறைக்கு ரூ.8,206 கோடியும், சிறுவணிக துறைக்கு ரூ.12,946 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கான வீட்டுக்கடன், மரபுசாரா எரிசக்தியுடன் கல்விக்கடன் மற்றும் மற்ற கடன்களுக்கு ரூ.478 கோடியும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருப்பூர் ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் தரிசனம் செய்ய அனுமதி!


இது சென்ற ஆண்டு கடன் திட்டத்தை விட ரூ.8,215 கோடி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்விக் கடனுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மாணவர்களுக்கு உடனடியாக கல்வி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Tiruppur

அடுத்த செய்தி