ஹோம் /திருப்பூர் /

பொது கழிப்பிடம் குறித்து புகார் அளிக்க திருப்பூருக்கு வந்தாச்சு புதிய வசதி

பொது கழிப்பிடம் குறித்து புகார் அளிக்க திருப்பூருக்கு வந்தாச்சு புதிய வசதி

பொது கழிப்பிடங்கள்

பொது கழிப்பிடங்கள்

திருப்பூரில் பொது கழிப்பிடங்கள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில், பொது  கழிப்பிடங்கள் முன்  க்யூஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் புகார் உடனுக்குடன் சரி செய்யப்பட இருக்கிறது. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூரில் பொது கழிப்பிடங்கள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில், பொது கழிப்பிடங்கள் முன் க்யூஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் புகார் உடனுக்குடன் சரி செய்யப்பட இருக்கிறது.

தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் மூலம் சுத்தம், சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக செல்போன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் சார்ந்து, உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பணிகள் இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட இருக்கின்றன.

இந்நிலையில் பொதுக்கழிப்பிடங்களில் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், க்யூஆர் கோடு உதவியுடன் செல்போன் மூலம் புகார் செய்யும் நோக்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தூய்மை இந்தியா திட்ட இணைய தள செயலியுடன் இணைக்கப்பட்ட க்யூஆர் கோடு பொதுக் கழிப்பிடங்களில் முகப்பில் வைக்கப்படும்.

இந்நிலையில் பொதுக்கழிப்பிடங்களில் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், க்யூஆர் கோடு உதவியுடன் செல்போன் மூலம் புகார் செய்யும் நோக்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி தூய்மை இந்தியா திட்ட இணைய தள செயலியுடன் இணைக்கப்பட்ட க்யூஆர் கோடு பொதுக் கழிப்பிடங்களில் முகப்பில் வைக்கப்பட இருக்கிறது.

Also Read: தென்காசியில் மலை மீது ஒரு சொர்க்கம்.. திருமலை முருகன் கோயிலுக்கு போயிருக்கீங்களா..? 

பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமலும், சுகாதாரம் மற்றும் தண்ணீர், விளக்கு வசதி இல்லாமல் இருப்பது போன்ற குறைகளை, தங்கள் செல்போனில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம், தூய்மை இந்தியா திட்ட இணைய செயலியில் அது பதிவாகிவிடும்.இதுகுறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அடுத்த 6 மணி நேரத்தில் குறை நிவர்த்தி செய்யப்படும் வகையில் இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சிகள் அளவில் இத்திட்டத்தை வேகப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு பொதுக் கழிப்பிடத்திலும் தூய்மை இந்தியா திட்டத்துடன் இணைந்த க்யூ ஆர் கோடு வைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by:Ramprasath H
First published:

Tags: Local News, Tiruppur, Toilet Clean