ஹோம் /திருப்பூர் /

காது அறுப்பட்ட நந்தியின் வரலாறு.. திருப்பூரில் உள்ள இந்த ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..?

காது அறுப்பட்ட நந்தியின் வரலாறு.. திருப்பூரில் உள்ள இந்த ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..?

சுக்ரீஸ்வரர் கோயில்

சுக்ரீஸ்வரர் கோயில்

Tiruppur District News : ராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன் ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிட்டதால், சுக்ரீஸ்வரர் என்று மூலவருக்கு பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த தலம் திருப்பூர் அருகே சர்க்கார்பெரியபாளையத்தில் இருக்கிறது.  

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

ராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன் ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிட்டதால், சுக்ரீஸ்வரர் என்று மூலவருக்கு பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த தலம் திருப்பூர் அருகே சர்க்கார் பெரியபாளையத்தில் இருக்கிறது.

இந்த கோயிலின் அர்த மண்டபத்தில் சுக்ரீவன் சிவனை பிரதிஷ்டை செய்த புடைப்பு சிற்பம் இருக்கிறது. இந்த தலத்தை இறைவன் குரக்குத்தளி ஆலயம் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த கோயிலில் மூலவர் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். வலதுபுறம் ஆவுடை நாயகியாக அம்மன் சன்னதி இருக்கிறது.

கோயிலுக்குள் கன்னி மூல கணபதி, தட்சிணா மூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சிலைகளும் இருக்கின்றனர். இந்த சிவனுக்கு நேர் எதிராக பத்திரகாளியம்மனும் காட்சியளிக்கிறார். மேலும், இக்கோயிலில் மூலவராக அக்னி லிங்கம் இருக்கிறது. வளாகத்திற்குள் பூதங்களில் தொடர்புடைய ஏனைய 4 லிங்களும் இருக்கின்றன.

சுக்ரீஸ்வரர் கோயில்

இதையும் படிங்க :  திருப்பூரில் உயர்கல்வியில் சேர முடியாத மாணவர்களுக்காக உதவி மையம்

மற்ற கோயில்களை போல, மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல், மூலவர் சன்னதிக்கு எதிரே வழியும் இல்லை. வடக்கு பார்த்த வாசலில் எதிரே பத்தரகளியம்மன் தெற்கு பார்த்த கோலத்தில் இருக்கிறார்.

சிவன் கோயில்களில் இருக்கும் தீப ஸ்தம்பம் அல்லது கொடிமரம் இந்த கோயிலில் கிடையாது. மூலவருக்கு எதிாில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் வீற்றிருப்பது தனிச் சிறப்பு, முதலில் உள்ள நந்திக்கு ஒரு பக்கம் காது அறுபட்டு உள்ளது.

பசுமாடு ஒன்று சிவபக்தரான விவசாயின் தோட்டத்திற்கு சென்று பயிா்களை மேய்ந்து வந்துள்ளது. அப்போது இதையறிந்த விவசாயி கதிா்அறுக்கும் அறுவாளால் பசுவின் காதை அறுத்தவிட்டார். இந்த விவசாயி சுக்ரீஸ்வரா் கோயிலில் சென்று வழிபாடு செய்தபோது, அங்கிருந்த நந்தி சிலையின் காதில் அறுபட்டு ரத்தம் வந்தது. உடனே வந்தது இறைவனின் நந்திதான் என்று தவறினை உணா்ந்து அதே போல் வேறு ஒரு நந்தி சிலையை வடிவமைத்து ஏற்கனவே இருந்த நந்தி சிலையை அகற்றி விட்டு புதிய சிலையை நிறுவினார்.

சுக்ரீஸ்வரர் கோயில்

ஆனால் மறுநாள் வந்து பார்த்தபோது அகற்றிய நந்தி சிலை மீண்டும் அதே இடத்தில் இருந்துள்ளது. அன்று முதல் இதே நந்திதான் இந்த இடத்திலும் இருந்து வருவதாக பக்தர்களும் நம்புகின்றனர்.

இதையும் படிங்க : நள்ளிரவில் தனியாக செல்பவர்களை குறிவைத்து திருட்டு - 6 பேரை கைது செய்த திருப்பூர் போலீஸார்

மேலும், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாக அறியப்படுகிறது. 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.

குழந்தை பாக்கியம், எதிரிகள் தொல்லை, திருமண தடை, தொழில், விவசாயம் உள்ளிட்டவைகளுக்கு வேண்டுதல்களையும் பக்தர்கள் வைத்து வருகின்றனர். பக்தர்களின் வேண்டுதல்களும், நிறைவேறுவதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், பிரதோஷம், பவுர்ணமி, அஷ்டமி உள்ளிட்ட நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. தினமும் நடை திறக்கப்பட்டு, இரவு நடை சாத்தப்படுகிறது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tiruppur