ஹோம் /திருப்பூர் /

திருப்பூரில் நாளை இலவச மருத்துவ முகாம் - மக்களே மிஸ் பண்ணாதீங்க!

திருப்பூரில் நாளை இலவச மருத்துவ முகாம் - மக்களே மிஸ் பண்ணாதீங்க!

வரும் முன் காப்போம்

வரும் முன் காப்போம்

Tiruppur District | திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதேபோன்ற முகாம் 19, 26ம் தேதிகளிலும் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாம்களில், சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.

இதில், பொதுமக்களுக்கு பொதுமருத்துவம், இருதய நோய் சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம், கண் சிகிச்சை, புற்றுநோய், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, குழந்தைகள் மருத்துவம் ஆகியவை நடைபெறுகின்றன.

இதேபோல, தோல் நோய் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், குடும்பநல சிகிச்சை மற்றும் ஆலோசனை, பால்வினை நோய் பரிசோதனை, சித்தா மருத்துவ சிகிச்சை, உயர் பரிந்துரை சிகிச்சை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம், கொரோனா தடுப்பூசி முதல், 2ஆம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) போடப்படுகிறது.

Must Read : தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபல அருவிகளின் லிஸ்ட் - சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்!

இந்த வரும் முன் காப்போம் திட்ட முகாமானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 3ஆவது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்.49 பகுதிக்கு நாளை (சனிக்கிழமை) மணியக்காரம்பாளையம் ரோட்டில் உள்ள தங்கவேல் திருமண மண்டபத்தில் நடைபெறுகிற.

2-வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.19 பகுதிக்கு, 19ஆம் தேதி திருநீலகண்டபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 1ஆவது மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.24 பகுதிக்கு 26ஆம் தேதி ஈ.பி.காலனி நடுநிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, 4ஆவது மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.40 பகுதிக்கு அடுத்த மாதம் 3ஆம் தேதி இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. இதை பொது மக்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Tiruppur