திருப்பூர் மாவட்டத்தில், பெட்ரோல், டீசல் இல்லாமல் இயற்கை எரிவாயுவில் இயங்கக் கூடிய பேருந்து விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் கோகுல்நாத். இவரது குடும்பத்தினர் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்து சேவை தொழில் சரிவை நோக்கி சென்றுள்ளது.
இதனால், பேருந்திற்கான செலவை கட்டுப்படுத்தும் வகையில், சி.என்.ஜி.யில் இயங்க கூடிய பேருந்தை கோல்குல் நாத் தனியார் பேருந்து நிறுவனத்தின் உதவியோடு தயாரித்துள்ளார்.
டீசல் விலை உயர்வு, கொரோனா ஊரடங்கு பாதிப்பு மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் பேருந்து சேவை தொழிலில் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், பேருந்திற்கான பராமரிப்பு செலவை குறைக்கும் வகையில் இந்த புதிய முறையை மேற்கொண்டதாக கோல்குல் நாத் தெரிவித்துள்ளார்.
கோல்குல் நாத் அவர்கள், அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் பேசி, டீசல் டேங்கிற்கு பதிலாக 90 லிட்டர் அளவிலான (சிஎன்ஜி) இயற்கை எரிவாயுவை நிரப்ப நான்கு கொள்கலன்களை அமைத்துள்ளார். அது, எரிவாயுவை வேகமாக நிரப்பக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டேக்கில் 90 கிலோ சிஎன்ஜி. கேஸ் நிரப்பலாம். இது 600 லிட்டர் டீசலுக்கு சமமானது என்று சொல்லப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இவ்வாறு இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதால், செலவும் வெகுவாகக் குறையும் அதன்படி, இயற்கை எரிவாயுவும், டீசலும் லிட்டர் அளவிலான விலை வேறுபாடு ரூ.40 அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இயற்கை எரியுவை பயன்படுத்தும் போது, புகை இருக்காது, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.
Must Read : திருப்பதிக்கு நிகராக போற்றப்படும் கோவில் - புதுக்கோட்டை மலையடிப்பட்டி குடைவரைக்கோவிலின் சிறப்புகள்!
சோதனை அடிப்படையில் இயக்கிப் பார்க்கப்பட்ட இந்த பேருந்தானது, வேகம், இழுவை போன்றவை சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது. எரிவாயு பொருட்களின் விலை உயர்வை அதிகரித்து வரும் நிலையில், இயற்கையை பாதிக்காமல் இருக்கும் நோக்கில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த பேருந்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த பேருந்து எப்போது சாலையில் மக்களை ஏற்றிக்கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இயற்கை எரிவாயுவில் இயங்கக் கூடிய முதல் பேருந்து திருப்பூர் மாவட்டத்தில் முதன் முதலில் வலம்வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, Local News, Tiruppur