Home /tiruppur /

திருப்பூரில் புதிதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூரில் புதிதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பூர்  மாவட்டத்தை பொறுத்த வரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,288 ஆக அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 22 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2020-ம் ஆண்டு தொடங்கியது. தற்போதுவரை கொரோனா பாதிப்பின் தாக்கம் தொடர்ந்துவருகிறது. இருப்பினும், முதல் மூன்று அலைகளைப் போல நான்காவது அலையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கொரோனா நான்காவது அலையால் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கணிசமாக பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்த வரையில், நேற்று மட்டும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,288 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 28 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 1,30,085 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 151 போ் சிகிச்சையில் உள்ளனா்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி