Home /tiruppur /

வெள்ளக்கோவில் சந்தைக்கு 20 டன் முருங்கை வரத்து: கிலோ எவ்வளவு தெரியுமா?

வெள்ளக்கோவில் சந்தைக்கு 20 டன் முருங்கை வரத்து: கிலோ எவ்வளவு தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்த வாரம் 90 விவசாயிகள் 20 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வாரச்சந்தையில் 20 டன் முருங்கைக் காய்கள் விற்பனைக்கு வந்தது. மேலும், முருங்கைக் காய் கிலோவுக்கு ரூ.25 வரை விலை போனது.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் வாரச்சந்தையில் ஞாயிறன்று முருங்கைக்காய் கொள்முதல் நடக்கிறது. அப்போது, இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளக்கோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அந்தவகையில் இந்த வாரம் 90 விவசாயிகள் 20 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முத்தூர், வெள்ளக்கோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.15 முதல் ரூ.17 வரைக்கும், மரம் முருங்கை ரூ.12 முதல் ரூ.15 வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.18 முதல் ரூ.25 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Tiruppur

    அடுத்த செய்தி