ஹோம் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 61 காலிப்பணியிடங்கள்... ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் -14ம் தேதி நோ்காணல்

திருப்பூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 61 காலிப்பணியிடங்கள்... ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் -14ம் தேதி நோ்காணல்

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

Tiruppur District | திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 61 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 14ம் தேதி நேர் காணல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பிக்கும் மாணவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 61 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், 14ம் தேதி நேர்காணல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் விதமாக தமிழ்நாடு அரசு மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டத்தை துவக்கியது.

இதையும் படிங்க: திருப்பூரில் அறிவிக்கப்பட்ட தீபாவளி ஆபர்.. கதர் வாங்குபவர்களுக்கு 30% தள்ளுபடியாம்..!

இத்திட்டத்தின் கீழ் சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, முடக்குவாதம், பெண்களை கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் மற்றும் நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு அதற்குரிய மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் மருத்துவம் பார்க்க மருத்துவ பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். போதிய மருத்துவர்கள், செவியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகள், துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டேட்டா மேனேஜர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டெண்டல் அசிஸ்டெண்ட், டிரைவர், செக்யூரிட்டி உள்ளிட்ட  61 காலி பணியிடங்கள் உள்ளன. மேலும் விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படையில் 35 வயது மற்றும் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கான நோ்காணல் வரும் 14ம் தேதி காலை 10 மணிக்கு, அறை எண்-240, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா்-641604 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. இதுதொடா்பான விவரங்களுக்கு இணையதள முகவரியை பாா்வையிடலாம். இந்த பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.20,000 முதல் ரூ.6500 வரை   மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

நிபந்தனைகள் :

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.  பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்ப படிவங்களை  https://tiruppur.nic.in/notice category/recruitment/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம்(Self Attested) செய்யப்பட்ட நகல்களை இணைத்து நேர்காணலின்போது  சமர்ப்பிக்க வேண்டும். கீழே கைபொப்பமிட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு / தேர்வுக்கு பொருத்தமான வேட்பாளரை   அழைக்கும் உரிமை உள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் தோராயமானதாகும். மேலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் இடம்: 

அறை எண்.240 - DME / 120 - DPH&DMS, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு திருப்பூர். நாள்: 14.10.2022 நேரம்: 10.00.  மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண். 0421-2478500.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tiruppur