ஹோம் /திருப்பூர் /

100 நாள் பணியாளர்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் - திருப்பூர் தோட்டக்கலை துறை அறிவிப்பு

100 நாள் பணியாளர்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் - திருப்பூர் தோட்டக்கலை துறை அறிவிப்பு

திருப்பூர்

திருப்பூர்

100 Day Laborers Can Be Utilized For Agricultural Work In Tiruppur | திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் உள்ள 100 வேலை வாய்ப்பு தொழிலாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோட்டக்கலைத்துறை  தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான ஆணவங்களை பட்டா, சிட்டா, அடங்கல் புத்தகங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவித

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் உள்ள 100 வேலை வாய்ப்பு தொழிலாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான ஆவணங்களை பட்டா, சிட்டா, அடங்கல் புத்தகங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

100 நாள் திட்ட பணியாளர்களை பயன்படுத்தி விவசாய பணிகள் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு, பல்லடம் தோட்டக்கலை துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படிங்க ; புரட்டாசி சனிக்கிழமை - திருப்பூரில் பெருமாள் கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகள்

இதுகுறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மோகனா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பல்லடம் வட்டாரத்தில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. தென்னை மரங்களை சுற்றி வட்டப்பாத்தி அமைத்தல், வரப்பு போடுதல் மற்றும் ஏரி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இப்பணிகளை மேற்கொள்ள விரும்பும் சிறு, குறு விவசாயிகள் இதுகுறித்து விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு சிறு, குறு விவசாயி சான்று, கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, நகல் வங்கி கணக்கு புத்தக நகல், இரண்டு போட்டோக்கள் ஆகியவற்றுடன் பல்லடம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tiruppur