முகப்பு /செய்தி /திருப்பத்தூர் / வாணியம்பாடியில் தனியார் ஊதுபத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து.. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

வாணியம்பாடியில் தனியார் ஊதுபத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து.. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

தனியார் ஊதுபத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

தனியார் ஊதுபத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

Thirupathur Factory Fire | ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாத இரவு நேரத்தில் ஆலையில் பயங்கர சத்தத்துடன் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

  • Last Updated :
  • Tirupathur (Tiruppattur), India

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே, தனியார் ஊதுபத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தெக்குப்பட்டி கிராமத்தில் உமா மகேஸ்வரன் எனும் நபர் குத்தகை அடிப்படையில் ஊதுபத்தி, சாம்பிராணி உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இதில், சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாத இரவு நேரத்தில் ஆலையில் பயங்கர சத்தத்துடன் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பரவி எரிந்த நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

தீயணைப்புப் பணிகள் பல மணி நேரம் தொடர்ந்த நிலையில் அவர்களுக்கு உதவியாக பொதுமக்களும் லாரிகள் மூலமாக தண்ணீரைக் கொண்டு அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Local News, Thirupathur