திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வேப்பல்நத்தம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல். இவருடைய ஏழு வயதுக் குழந்தை மோனிகாவிற்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியில் உள்ள வெலக்கல்நாத்தம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் என்பதால் பாராசிட்டமல் மாத்திரையைக் கொடுத்து அனுப்பி உள்ளனர். மருத்துவமனையில் வழங்கப்பட்ட மாத்திரைகளைப் பெற்றோர்கள் சிறுமிக்கு அளிக்க உடைத்துள்ளனர். அப்போது அதில் கம்பி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இணைந்து அரசினர் ஆரம்பச் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து அறிந்து, திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் செந்தில் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
Also Read : ஆன்லைன் ரம்மியால் நடைபெறும் தற்கொலைக்கு ஆளுநர்தான் காரணம் - அன்புமணி ராமதாஸ் காட்டம்
இதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், செந்தில்குமார் பாராசிட்டமில் மருந்து பெட்டகத்தில் இருந்து அனைத்து மாத்திரைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அதனை உறுதி செய்யும் வகையில், மருத்துவ அலுவலர் அனு என்றவரிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.
அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கொடுக்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: M.வெங்கடேசன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tablets, Tirupattur