முகப்பு /செய்தி /திருப்பத்தூர் / மதுபோதையில் இளைஞர் அடித்துக்கொலை.. நண்பன் வெறிச்செயல்.. ஆம்பூரில் அதிர்ச்சி சம்பவம்

மதுபோதையில் இளைஞர் அடித்துக்கொலை.. நண்பன் வெறிச்செயல்.. ஆம்பூரில் அதிர்ச்சி சம்பவம்

ஆம்பூர் கொலை வழக்கு

ஆம்பூர் கொலை வழக்கு

ஆம்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை இருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupathur (Tiruppattur), India

ஆம்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், புதுமனை மலைமேடு பகுதியைச் சேர்ந்த அல்லா பகஷா (35). இவர் தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.இவர்  மாங்காதோப்பு பகுதியில் கடந்த 7 ஆம் தேதி  நள்ளிரவில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த போது  நண்பர்கள் இடைய ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த அல்லா பகஷ-வை  அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அல்லா பகஷ் உடன்  மது அருந்திய அவரது நண்பர் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பது தெரியவந்தது. மேலும், நடைபெற்ற தொடர்ச்சியான விசாரணையில்  பல திடுக்கிடும் தகவல் வெளியாகியது.

மது அருந்தும்போது, கூடுதலாக மதுபானமும், பணமும் கேட்டதால்  தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் அல்லா பகஷா உயிரிழந்தது தெரிய வந்தது. இஸ்மாயில், சபீல் அகமது இருவரும் சேர்ந்து அல்லா பகஷசை கல்லால் தாக்கியதாகவும் இதனால் அவர் அங்கேயே மயங்கி விழுந்ததால் அங்கிருந்து தப்பி சென்றதாக இஸ்மாயில் ஒப்புக்கொண்டார்.அதனைத் தொடர்ந்து அவர் இறந்து விட்டதாக தெரியவந்தது என காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையும் வாசிக்கராமநாதபுரத்தில் 45 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்.. கடத்தலுக்கு தயாரானதை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்!

அதனைத் தொடர்ந்து இஸ்மாயில், சபீல் அகமது ஆகிய இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.  ஆம்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை இருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 செய்தியாளர்: M.வெங்கடேசன் (திருப்பத்தூர்)

First published:

Tags: Crime News