முகப்பு /செய்தி /திருப்பத்தூர் / ரூ.15 லட்சம் செலவில் மனைவிக்கு கோவில் கட்டும் கணவர்.. திருப்பத்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்

ரூ.15 லட்சம் செலவில் மனைவிக்கு கோவில் கட்டும் கணவர்.. திருப்பத்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்

மனைவியில் சிலையுடன் கணவர்

மனைவியில் சிலையுடன் கணவர்

திருப்பத்தூர் அருகே 15 லட்ச ரூபாய் மதிப்பில் கணவன் தனது இறந்த மனைவிக்காகக் கோயில் கட்டி வருகிறார்.

  • Last Updated :
  • Tirupattur, India

திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் தக்டிவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்குத் திருமணமாகி 35 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மனைவி ஈஸ்வரி இயற்கை மரணம் அடைந்தார்.

மனைவி இறந்த துக்கத்தில் வேதனையடைந்த சுப்பிரமணி அவருக்குச் சொந்தமான நிலத்தில் 15 சென்ட் இடத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பில் 6 அடி உயர ஈஸ்வரியின் திருவுருவ சிலையை நிறுவி கோயில் கட்டி வருகிறார். இதனைக் காண அப்பகுதி மக்கள் வியப்புடன் வந்து செல்கின்றனர். மனைவி மேல் அலாதி அன்பு வைத்திருக்கும் கணவர் அதனை வெளிப்படுத்த அவருக்காக கோவிலை கட்டி வருகிறார். மேலும் மனைவியைத் தினமும் வணங்கி வருவதை அப்பகுதி மக்கள் இவரைப் பாராட்டி வருகின்றனர்.

Also Read : 90% நிலத்தை கையகப்படுத்திய பின்னரே பாலம் மற்றும் சாலைப் பணிகள் தொடக்கம்.. அமைச்சர் எ.வ.வேலு

வருகின்ற 31ஆம் தேதி முதலாம் ஆண்டு நினைவு நாளை கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார்.  அப்போது 500 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்து வருவதாகச் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்: M.வெங்கடேசன்

top videos
    First published:

    Tags: Husband Wife, Temple