திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் குட்டிமணி விஜயலட்சுமி இல்ல திருமண விழாவிற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்தார். திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்கள் ராஜேந்திரன் - பிரியங்கா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், ‘பாலாற்றை பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் 48 வது இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 19-வது நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணம் ஆளுநர்தான் என கூறினார்.
தமிழகத்தில் போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக காவல்துறைக்கு தெரியாமல் விற்பதற்கு வாய்ப்பு இல்லை. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
கொரோனாவிற்க்கு பிறகு தான் மது விற்பனை அதிகரித்து உள்ளது. அடுத்த கட்ட இளைஞர்களை பார்க்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. போதை பொருட்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் போதைப் பொருட்களை பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதனை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியாவிலேயே மது விற்பனைக்கு டார்கெட் வைத்து விற்பனை செய்யக்கூடிய மாநிலம் தமிழகம்.
இந்தியாவிலேயே அதிக மது விற்பனையாகும் மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே அதிகம் சாலை விபத்து ஏற்படும் மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே அதிகம் விதவைகள் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.
இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு. இவை அனைத்துக்கும் காரணம் மது. தற்பொழுது மதுக்கடைகள், மதுபார்கள் அதிகரித்து வருகிறது.
மதுவால் 30 சதவீதம் தமிழகத்திற்கு வருவாய் வருகிறது. இதை தவிர்க்க வேண்டும். திமுகவின் நிறுவனர் அண்ணாவின் கொள்கைக்கு எதிரானது. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது வேண்டுகோள் மது விற்பனையைத் தவிர்க்க வேண்டும்.
அண்ணாவின் கொள்கை, தந்தை பெரியாரின் கொள்கை இவற்றை பயன்படுத்துகின்ற திமுக அவர்களுடைய கொள்கையை ஏற்க மறுக்கின்றார்.
கருப்புப் புடவை: காங்கிரஸுக்கு ஆதரவா? சபாநாயகர் அப்பாவு கிண்டல்.. வானதி சீனிவாசன் விளக்கம்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கடையை படிப்படியாக குறைப்போம். மதுவை ஒழிப்போம் என சொல்லிக் கொண்டிருந்த திமுக, தற்பொழுது ஒரு கடையை கூட மூடவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர்களை மதுவில் இருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். அதற்கு ஏற்ப 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbumani ramadoss, Online rummy