முகப்பு /செய்தி /திருப்பத்தூர் / ஜோலார்பேட்டையில் ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சி.ஆர்.பி.எஃப் வீரர் கைது...

ஜோலார்பேட்டையில் ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சி.ஆர்.பி.எஃப் வீரர் கைது...

சிஆர்பிஎஃப் வீரர் கைது

சிஆர்பிஎஃப் வீரர் கைது

ஜோலார்பேட்டையில் ரயில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைகொடுத்த சி.ஆர்.பி.எஃப் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Jolarpet, India

ஜோலார்பேட்டை அருகே ரயிலில் பயணம் செய்த பெண் பயணிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சிஆர்பிஎப் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்திலிருந்து ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் வரை செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் பெங்களூர் பகுதியைச் சார்ந்த சௌஹான் குமார் மனைவி வாசவி சௌஹான்(38) பயணம் செய்துள்ளார்.

ஜோலார்பேட்டைக்கும் காட்பாடிக்கும் இடையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் பயணம் செய்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுரேஷ்(வயது 38) என்பவர் அருகில் அமர்ந்து பயணம் செய்தபோது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக டிக்கெட் பரிசோதகரிடம் அந்தப் பெண் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காட்பாடி ரயில்வே போலீசாரிடம் சுரேஷை ஒப்படைத்தனர். சம்பவம் நடந்தது ஜோலார்பேட்டை ரயில்வே  எல்லை என்பதால் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னையில் திடீரென்று இடிந்துவிழுந்த 50 ஆண்டு பழைய கட்டிடம்...

மேலும் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். மேலும் காவல்துறை விசாரணையில் அவர் அதிகளவில் மது போதையில் இருந்ததாகவும் மது போதையில் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டது  தெரியவந்துள்ளது.

top videos

    செய்தியாளர்: வெங்கடேசன், திருப்பத்தூர்.

    First published:

    Tags: Sexual harassment, Vellore