திருநெல்வேலி மாவட்ட வேலை வாய்ப்புத்துறை சார்பில் பெருமாள்புரம், சி காலனியில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டதாரிகள், தொழிற்கல்வி பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம், நடைபெற்றது. இதில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் ஏர்டெல் நிறுவனம் சார்பில் 10, 12 ஆம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு சேல்ஸ்மேன் உள்ளிட்ட வேலைகள் 12,000 ரூபாய் ஊதியத்தில் வழங்கப்பட்டது. அவர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீ சாஸ்தா இன்ஜினியரிங் கம்பெனி சார்பில் பனக்குடியில் சோலார் ப்ராஜெக்ட் உற்பத்தி பணிக்கும், தென்காசி, ஆரல்வாய்மொழி, கோயம்புத்தூர், கயத்தார் உள்ளிட்ட இடங்களில் காற்றாலை சரி செய்தல் பணிக்கு 12,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் மற்றும் இ.எஸ்.ஐ, பிஎஃப் தங்குமிடம் உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
விருட்சம் மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட் நிறுவன பணிக்கு 19,000 ரூபாய் ஊதியமும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டது. முத்தூட் நிறுவன சேல்ஸ்மேன் பணிக்கு 18,000 ரூபாய் ஊதியமும் இ.எஸ்.ஐ, பிஎஃப் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நெல்லை அறிவியல் மையத்தில் காணும் பொங்கலையொட்டி குவிந்த மக்கள்..
செய்தியாளர்: சந்தானம், திருநெல்வேலி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirunelveli