முகப்பு /திருநெல்வேலி /

உலக புத்தக தின விழா.. நெல்லையில் குழந்தைகளுக்கு சிறப்புப் போட்டி; மறக்காம கலந்துக்கோங்க!

உலக புத்தக தின விழா.. நெல்லையில் குழந்தைகளுக்கு சிறப்புப் போட்டி; மறக்காம கலந்துக்கோங்க!

நெல்லை

நெல்லை

Book Day competition | உலக புத்தக தின விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் திருநெல்வேலி மாநகர சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சிறப்புப் போட்டி நடத்தப்படுகிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

உலக புத்தக தின விழாவை முன்னிட்டு நெல்லையில் குழந்தைகள் தங்களை ஈர்த்த புத்தகங்கள் என்ற தலைப்பில் பேச வேண்டும். இந்தப்போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் மற்றொரு பிரிவாகவும் கலந்து கொள்ளலாம். இந்த போட்டி ஏப்ரல் 22 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு அருங்காட்சியகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

மறுநாள் ஏப்ரல் 23 உலக புத்தக தின விழா அன்று காலை 10 மணிக்குஅருங்காட்சியகத்தில் நடைபெறும் நிகழ்வில் தங்களை ஈர்த்தபுத்தகம் குறித்து சிறப்பாக பேசியகுழந்தைகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட இருக்கிறது .மேலும் நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதையும் படிங்க | அதிகரிக்கும் சைபர் க்ரைம்.. நெல்லையில் விழிப்புணர்வு!

top videos

    நிகழ்வில் பங்கு பெற விரும்புபவர்கள்75024 33751என்ற எண்ணில் தொடர்பு கொண்டுதங்கள் பெயர், வகுப்பு போன்ற விபரங்களை பதிவு செய்யவும் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர்சிவ.சத்தியவள்ளி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Tirunelveli