முகப்பு /திருநெல்வேலி /

World Athletics Day 2023 : உடல் ஆரோக்கியத்தில் கவனமா இருங்க.. நெல்லை அத்லெட்டிக் கோச் அட்வைஸ்!

World Athletics Day 2023 : உடல் ஆரோக்கியத்தில் கவனமா இருங்க.. நெல்லை அத்லெட்டிக் கோச் அட்வைஸ்!

X
மாதிரி

மாதிரி படம்

World Athletics Day 2023 : உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து நெல்லை அத்லெட்டிக் கோச் அறிவுரை வழங்கியுள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

உடல் ஆரோக்கியத்தை பேணுவது அவசியம் என்று திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அத்லெட்டிக் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

உலக தடகள தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. நோய்களை தடுப்பதற்கும், நல்ல ஆரோக்கியத்தை பேணுவதற்கும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.

மக்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தடகளம் மற்றும் பிற உடற்பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், உலக தடகள தினம் குறித்து திருநெல்வேலியை சேர்ந்த அத்லெட்டிக் கோச் டாக்டர் ஆர்.சத்யா நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க : "நண்பன் ஒருவன் வந்த பிறகு" - குடத்தில் மாட்டிய ஆட்டை காப்பாற்றிய குட்டி ஆடு - நெகிழ்ச்சி வீடியோ

இதுகுறித்து அவர் கூறுகையில், “உலக தடகள தினத்தின் நோக்கம் விளையாட்டு குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிப்பதும், விளையாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி இளைஞர்களுக்கு அறிவுறுத்துவதும் ஆகும்.

நெல்லை அத்லெட்டிக் கோச் அட்வைஸ்

இளைஞர்களிடையே விளையாட்டை பிரபலப்படுத்தவும், இளைஞர்கள் விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    உடற்பயிற்சி உள்ளிட்டவை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வதுடன் நோய், நொடி இல்லாமல் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். உலக தடகள தினம் குறித்து தடகள பயிற்சி பெறும் வீரர்கள் மற்ற மாணவ, மாணவிகளுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

    First published:

    Tags: Health, Lifestyle, Local News, Tirunelveli