அம்பாசமுத்திரத்தை சேர்ந்த 63 வயதான மோகன் என்பவர் மரச்செப்பு பொருட்களை கடந்த 50 வருடங்களாக செய்து வருகிறார். எட்டாம் வகுப்பு முடித்தவுடன் தனது தந்தை இத்தொழிலை கற்றுக் கொடுத்ததாக தெரிவித்த அவர் அப்பகுதியில் கடை வைத்து விளையாட்டு பொருட்களை தயார் செய்து வருகிறார். தற்போது இவர் தனது அனுபவத்தில் ஸ்டவ் அடுப்புடன் இணைக்கப்பட்ட சிலிண்டர் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை செய்து அசத்தி வருகிறார்.
மறக்க முடியாத நினைவுகளை இந்த மரச்செப்பு பொருட்கள் கொடுக்கும். அத்தனை சிறப்புமிக்க இந்தப் பொருட்கள் எப்படி செய்யப்படுகிறது தெரியுமா?
இதற்காகவே வெட்டி விற்கப்படும் மரங்களை, வாங்கிவந்து அவற்றை ஆறு மாதம் வரை வெயில் படாதவாறு காய வைக்கிறார்கள். நன்கு காய்ந்த பின் கடைசல் மூலம் விளையாட்டுப் பொருட்களின் வடிவத்துக்கு அவை மாற்றப்படுகின்றன. அவற்றின் மீது வண்ணங்களைத் தீட்ட அரக்கு பயன்படுத்துகின்றது. இந்த அரக்கு, இயற்கையான மரங்களில் இருந்து கிடைக்கின்றன. இது பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களைபோல குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் விருப்பத்தையும் மையப்படுத்தியே மரச்செப்பு விளையாட்டு பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. இந்தத் தொழிலை மட்டுமே நம்பி, ஏராளமான குடும்பங்கள் அம்பாசமுத்திரத்தில் உள்ளன. இந்த மரச்செப்பு விளையாட்டுப் பொருட்கள் தேவர் குளத்தில் இருந்து வாங்கப்படும் பனை ஓலை பெட்டியில் வைத்து வியாபாரம் செய்யப்படுகிறது. பாரம்பரியமான மரச்செப்பு விளையாட்டுப் பொருட்கள் 150 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மரச்செப்பு விளையாட்டுப் பொருட்களை செய்து வரும் தொழிலாளி மோகன் கூறுகையில் இந்த தொழிலை எனது 13 வயதில் தொடங்கினேன். தந்தை எனக்கு தொழிலை சொல்லிக் கொடுத்தார். நான் சுயமாக கேஸ் ஸ்டவ் உடன் இணைக்கப்பட்ட சிலிண்டர் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களை செய்துள்ளேன்.
பலர் என்னை பாராட்டியுள்ளனர். இன்னும் பல விளையாட்டுப் பொருட்களை செய்ய ஆர்வம் உள்ளது. அதற்கு உதிரி பாகங்கள் உள்ளிட்டவை தேவைப்படுகிறது.
பொருளாதாரம் இல்லாததால் யாராவது தனக்கு உதவினால் பல வகையான விளையாட்டு பொருட்களை தயாரித்து மேலும் விற்பனைப்படுத்துவேன். இத்தொழிலுக்கு அரசாங்கம் பல உதவிகளை செய்துள்ளது.
தேங்காய் பூ சாப்படிருக்கீங்களா... நெல்லையில் பரபரக்கும் விற்பனை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli