முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை பெண்களுக்கு குட்நியூஸ்.. ஒன் ஸ்டாப் சென்டரில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

நெல்லை பெண்களுக்கு குட்நியூஸ்.. ஒன் ஸ்டாப் சென்டரில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Nellai job | திருநெல்வேலியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஒன் ஸ்டாப் சென்டர்ல் பணி புரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலக செய்தி குறிப்பில் மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளகுடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஒன் ஸ்டாப் சென்டர் செயல்பட்டு வருகிறது.

சுழற்சி முறையில் பணிபுரிய வழக்குப் பணியாளர் இரண்டு நபர்கள் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க | நெல்லையில் மே 21ஆம் தேதி யூபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு..!

விண்ணப்பங்களை http://tirunelveli.nic.in என்ற திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்ய வேண்டும் பின்னர் மாவட்ட சமூக நல அலுவலகம் சுப்பிரமணியபுரம் தெரு, வ உ சி மைதானம் எதிரில் திருவனந்தபுரம் சாலை பாளையங்கோட்டை திருநெல்வேலி 627002 என்ற முகவரிக்கு இம்மாதம் 27ஆம் தேதிக்குள் அஞ்சல் மூல,மாகவோ அல்லது நேரிலோ அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Job, Local News, Tirunelveli