முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் பெய்த மழையால் நிரம்பிய நீர்நிலைகள்.. விவசாயிகள் மகிழ்ச்சி..

நெல்லையில் பெய்த மழையால் நிரம்பிய நீர்நிலைகள்.. விவசாயிகள் மகிழ்ச்சி..

X
நெல்லையில்

நெல்லையில் பெய்த மழை

Tirunelveli News : நெல்லையில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் அதிகாலை 3:30 மணி மணியிலிருந்து அதிகாலை 4:30 மணிக்குள் இலங்கை மட்டக்களப்பு திரிகோணமலை இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் நெல்லையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து மாலை முதல் நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காலகட்டங்களான அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட மாவட்டங்கள் டெல்டா மேற்கு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. தென் மாவட்டங்களில் புதிய மலை இல்லை. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பவில்லை. இதனால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் எழுந்தது.

இந்நிலையில், நெல்லையில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததோடு நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மலையால் 143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 75.10 அடியாக உள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 86.15 அடியாக உள்ளது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 77.65 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கும் பற்றத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் : சந்தனகுமார் - திருநெல்வேலி

First published:

Tags: Local News, Tirunelveli, Weather News in Tamil