திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக்குத் தேசிய தர மதிப்பீட்டுக் கல்விக்குழு (NAAC) A++ எனும் உயர்தரம் வழங்கியது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக்குத் தேசிய தர மதிப்பீட்டுக் கல்விக்குழுவினர் (NAAC) 16.03.2023, 17.03.2023 ஆகிய இரு நாட்கள் நான்காம் சுற்றின் தர மதிப்பீட்டிற்காக வருகை தந்தனர்.
கல்லூரியின் பாடத்திட்டம், கற்றல் கற்பித்தல் நவீன முறைகள், கட்டிட வசதிகள், ஆய்வக வசதிகள், கல்லூரி அலுவலகம், நூலகம், விளையாட்டு வசதிகள், மாணவர் நலன், விடுதி வசதிகள், தேசிய மாணவர் படை, தேசியத் தொண்டு இயக்கம், தேர்வாணையர் , புல முதன்மையர் அலுவலகம், அகத்தர மதிப்பீட்டுஉறுதிக்குழு அலுவலகம், சதக்கத் கிராம மேம்பாட்டுத் திட்டம், அகத்தர மதிப்பீட்டு உறுதிக் குழுத் தரக் கொள்கைகள், ஆய்வுச் செயல்பாடுகள், ஆட்சிக்குழுவின் எதிர்காலத் திட்டம் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து தரமதிப்பீடு செய்தது.
அக்குழுவின் தலைவராக ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ஃபக்கீர் மோகன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் சிவபிரசாத் அதிகாரி, அக் குழுவின் உறுப்பினர்களாக தென்மேற்கு டெல்லி ஸ்ரீ லால்பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகக் கல்வியியல் துறைத் தலைவர் முனைவர் ரக்ஷனா வர்மா மோகன், கர்நாடக மாநிலம் மைசூரு 3சரஸ்வதிபுரம் ஜே.எஸ்.எஸ்.மகளிர் கல்லூரி மேனாள் முதல்வர் டாக்டர் சுரேஷா கித்தூர் வீரபத்ர ப்பா ஆகியோர் வருகை தந்து ஆய்வு செய்தனர்.
அக்குழுவுக்குக் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில் மரியாதை செய்யப்பட்டது. கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவர் அல்ஹாஜ் வாவு எஸ். செய்யது அப்துர் ரஹ்மான், கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹுர் ரப்பானி, ஆட்சிக் குழுப் பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம். ஷேக் அப்துல் காதர், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் எம்.கே.எம். முஹம்மது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முஹம்மது நவாப் ஹூசைன்,அல்ஹாஜ் பி.எஸ்.எம். இல்யாஸ், பேராசிரியர் எஸ். அபுபக்கர் ஆகியோர் வரவேற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர், அகத்தர உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ.செய்யது முகமது ஆகியோர் கல்லூரியின் வளர்ச்சியை அறிக்கையாகச் சமர்ப்பித்தனர்.
பல்வேறு துறைகளின் துறைத் தலைவர்கள் தங்கள் துறைகளின் செயல்பாடுகளை விளக்கினர். கல்லூரி ஆட்சிக் குழுவினருடன் தேசியத் தரமதிப்பீட்டுக் குழு ஆலோசனை நடத்தியது. பல்வேறு துறைகளுக்குச் சென்று துறையின் செயல்பாடுகளைப் பார்வையிட்டனர். நாக் குழு, மாணவர்கள், பயின்ற மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், கல்லூரி அலுவலர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடினர். பல துறைகளின் ஆய்வுத் துறைகளைகளையும் கல்லூரி நூலகத்தையும் பார்வையிட்டுக் கல்லூரியின் பல்வேறு வசதிகளை ஆய்வு செய்தனர்.
நிறைவுக் கூட்டம் 17.03.2023 மாலை 5 மணிக்கு நிறைவுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சிக்குழுத் தலைவர், கல்லூரித் தாளாளர், ஆட்சிக்குழுப் பொருளாளர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் டாக்டர் சே.மு.அப்துல் காதர் வரவேற்புரையாற்றினார். நாக்குழுவின் தலைவர்ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ஃபக்கீர் மோகன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் சிவபிரசாத் அதிகாரி தலைமையுரையாற்றி நாக் குழுவின் அறிக்கையைக் கல்லூரி முதல்வர் டாக்டர் சே.மு. அப்துல்காதரிடம் வழங்கினார்.
A++ உயர்தரம் இரண்டு தினங்கள் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியைத் தரமதிப்பீடு செய்ததன் அடிப்படையில், தேசியத் தரமதிப்பீட்டுக் கல்விக் குழு (NAAC) அலுவலகம் 21.3.2023 செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட தரமதிப்பீட்டின் படி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக்கு 3.56 மதிப்பெண்ணோடு A++ எனும் உயர்மதிப்பீடு அளிக்கப்பட்டது.
இச்செய்தியை திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் டாக்டர் சே.மு.அப்துல் காதர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இச்சந்திப்பில் அகத்தர மதிப்பீட்டு உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அ. செய்யது முகமது, தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் ச.மகாதேவன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் A++ எனும் உயர்தரம் குறித்து கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் ச.மகாதேவன் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli