18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயபெண் எடுத்த முயற்சியில் உருவான சாரா டக்கர் ஆசிரியர் பயிற்சி பள்ளி இன்று வரையில் நெல்லை மக்களுக்கு கல்வி அறிவைவழங்கும் ஒரு நிறுவனமாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. யார் இந்த பெண்? எதற்காக இந்த கல்லூரியை நெல்லையில் நிறுவினார் என்பது குறித்து பார்க்கலாம்?
சாரா டக்கர்
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது திருநெல்வேலி கடாச்சிபுரம் பகுதியில் வசித்தவர் தான் ஜான் டக்கர். இவர் பிரிட்டிஷ் அரசாங்க வேலையில் இருந்தததாக கூறப்படுகிறது. இவரது சகோதரி தான் சாரா டக்கர். 14 வயதான மாற்றுத்திறனாளியான இவர் இந்த பகுதியில் பெண்கள் யாரும் கல்வி கற்கவில்லை என்பதை கவனிக்கிறார்.
ஆண்கள் ஆசிரியர்களாக இருப்பதால் பெண் பிள்ளைகளை கல்வி கற்க குடும்பத்தினர் அனுப்புவதில்லை என்பதை அப்பெண்களின் பேச்சின் மூலம் அறிந்து கொண்டார். உடனடியாக இந்த பகுதியில் பெண்களுக்கு என்று தனியாக கல்வி நிறுவனங்கள் அமைக்க வேண்டும் என்று எண்ணினார். தன் எண்ணங்களை தனது சகோதரரான ஜான் டக்கரிடம் தெரிவித்தார். பெண்களுக்கு என்று தனியாக கல்லூரி அமைக்க வேண்டும் என இருவரும் தீர்மானிக்கின்றனர்.
சொந்த நகைகளை கொடுத்து உதவி
சகோதரனிடம்தனது 24 பவுன் நகையை கொடுக்கிறார் சாரா டக்கர். இந்த நகையை முதல் மூலதனமாக வைத்து கல்வி நிறுவனங்களை அமைக்க தொடங்குங்கள் என்றார். அவரது கோரிக்கையை ஏற்ற சகோதரரும் திருநெல்வேலி மாவட்டம் கடாட்சபுரத்தில் 1843-ல் முதன் முதலாக ஆசிரியர் பயிற்சி பள்ளியை அமைக்கும் பணிகளை ஆரம்பித்தார்.
சாரா டக்கர் நகை கொடுத்ததோடு நில்லாமல்தனது நண்பர்கள் மற்றும் சமூக அமைப்புகள் பலவற்றிற்கு இந்த கல்வி நிறுவனத்தை அமைக்க நிதி சேகரித்தார். நண்பர்கள் நிதி உதவியுடன் கல்வி நிறுவனத்தின் பணிகள் விரைவில் முடிந்தது. இந்தியாவின் முதல் பெண்களுக்கான கல்வி நிறுவனமும் தொடங்கப்பட்டது.
இதையும் படிங்க : ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!
இப்பயிற்சி பள்ளிஆங்கிலேயரின் மற்ற கல்வி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு மேல்நிலைப் பள்ளியானது. 1890ல் 5 மாணவிகளுடன் சாரா டக்கர் உயர்நிலைப் பள்ளியாக' தரம் உயர்த்தப்பட்டது. சாரா டக்கர் உயர்நிலைப் பள்ளியை 2ம் தரக் கல்லூரியாக உயர்த்தி, 1895ம் ஆண்டில், பெண்களுக்கான முதல் கல்லூரியாக மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இத்தனை முயற்சிகளை மேற்கொண்டு இன்று நெல்லை பெண்களின் கல்வியறிவு பெற வைத்த சாரா டக்கரை இன்றளவும் நன்றியுடன் நினைவுகூர்கின்றனர் நெல்லை பெண்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli