முகப்பு /திருநெல்வேலி /

கோடைக்கு முன்பே தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரிப்பு.. நெல்லையில் எவ்வளவு விலைக்கு விற்பனையாகிறது தெரியுமா?

கோடைக்கு முன்பே தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரிப்பு.. நெல்லையில் எவ்வளவு விலைக்கு விற்பனையாகிறது தெரியுமா?

X
கோடைக்கு

கோடைக்கு முன்பே தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரிப்பு

Watermelon Sale : கோடைக்கு முன்பே நெல்லையில் தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் கோடையை வரவேற்கும் விதமாக தர்பூசணிப்பழங்கள் விற்பனைக்கு வரத்தொடங்கி விட்டன. கிலோ ரூ.20க்கு விற்கப்படுகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் அதிகமாக இருக்கும். குறிப்பாக மே மாதம் அக்னி நட்சத்திர வெயில் 25 நாட்களுக்கு உச்சகட்டமாக இருக்கும். பிப்ரவரி மாத இறுதியில் வெயில் தாக்கம் படிப்படியாக உயரும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீராக பெய்யவில்லை. இதனால் கோடை வெயில் தாக்கம் வழக்கம்போல் இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில், திருநெல்வேலியில் இப்போதே பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக உள்ளது. வரும் நாட்களில் இது மேலும் உயர வாய்ப்புள்ளது. பகலில் பயணம் செய்பவர்கள் குளிர்பானங்களை விரும்பி வாங்க தொடங்கிவிட்டனர். கோடையின் தொடக்கமாக முதலில் வருவது நீர் சத்து அதிகம் உள்ள தர்பூசணிப் பழங்கள் தான். இவை கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. அதிக நீர்சத்து உள்ள இந்த தர்பூசணிப்பழங்கள் முழு பழமாகவும், சிறிய துண்டுகளாகவும், சர்பத் போன்ற ஐஸ் கலந்த நீராகரமாகவும் கோடை காலத்தில் விற்கப்படுகிறது.

இதன் விலையும் மற்ற பழ ஜூஸ்களை விட குறைவாக இருப்பதால் மக்கள் அதிகம் விரும்பி பருகுகின்றனர். முருகன் குறிச்சி உள்ளிட்ட மாநகரின் பல பகுதிகளில் தர்பூசணிப்பழங்கள் சாலையோரம் விற்பனைக்கு குவிந்துள்ளன. தற்போது இவை ஒரு கிலோ ரூ.20 என்ற விலையில் பழத்தை எடைபோட்டு விற்பனை செய்கின்றனர்.  இதுகுறித்து தர்பூசணி பழ வியாபாரி மீனா கூறுகையில், “உடம்பிற்கு குளிர்ச்சி தரக்கூடிய இந்த பழங்கள் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். மற்ற நோய்களுக்கும் தர்பூசணி பழங்களை சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தர்பூசணி பழங்களை நடைபாதை கடைகளில் வாங்கி எங்களுக்கு ஆதரவு தாருங்கள். அதை வாங்கி சாப்பிட்டு நீங்களும் ஆரோக்கியமாக இருங்கள்” என அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Tirunelveli