முகப்பு /திருநெல்வேலி /

கங்கைகொண்டான் சரணாலயத்தில் மான்களுக்கு 8 தொட்டிகளில் தண்ணீர்!

கங்கைகொண்டான் சரணாலயத்தில் மான்களுக்கு 8 தொட்டிகளில் தண்ணீர்!

மான்களுக்கு 8 தொட்டிகளில் தண்ணீர்

மான்களுக்கு 8 தொட்டிகளில் தண்ணீர்

Tirunelveli News : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சரணாலயத்தில் மான்களுக்கு 8 தொட்டிகளில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் புள்ளிமான்கள் சரணாலயத்திற்கு தினமும் சிப்காட் மூலம் வழங்கப்படும் தண்ணீரானது எட்டு தொட்டிகளில் மான்கள் குடிக்கும் பொருட்டு வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் நிரப்பப்படுவதாக வன உயிரின காப்பாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கங்கைகொண்டான் புள்ளி மான்கள் சரணாலயம் 288.40 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் சுற்றளவு 7.60 கிலோமீட்டர் ஆகும். திருநெல்வேலி வனத்துறை சார்பில் இந்த சரணாலயத்திற்கு தினமும் சிப்காட் மூலம் வழங்கப்படும்.

தண்ணீரை சரணாலயத்தில் உள்ள 8தண்ணீர் தொட்டிகளில் மான்கள் குடிக்கும் பொருட்டு வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் நிரப்பப்படுகிறது. மான்களின் உணவு தேவைக்காக தீவனப்புல் வளர்க்கப்பட்டு மான்களுக்கு அளிக்கப்படுகிறது.

கங்கைகொண்டான் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள சாலையில் அடிபட்டு காயமடைந்த நிலையில் மீட்கப்படும் மான்களுக்கு சிகிச்சை அளித்து பராமரிப்பதற்காக, சரணாலயத்திற்குள்ளேயே மான்கள் மீட்பு கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு திருநெல்வேலி வன கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையும் படிங்க : இனி ஈஸியா வரி செலுத்தலாம்.. நெல்லை மாநகராட்சியில் புதிய வசதி அறிமுகம்!

20223 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு மற்றும் பசுமை சமுதாய அமைப்பின் கீழ் சூரிய மின் வசதியுடன் கூடிய ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டி கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சரணாலய கண்காணிப்பு பணிக்காக இரண்டு கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளன தினமும் பகலில் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு நேரங்களில் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் வீதம் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவர்கள் சரணாலய பகுதி மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இரவில் ரோந்து பணியில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சரணாலயத்தில் சேதமடைந்த சுற்றுச்சூழல் பகுதிகள் சீமை கருவேல மரம் கொண்டும் கம்பி வேலி அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளன. சேதமடைந்த சுற்றுச்சுவரை முழுவதும் சரி செய்வதற்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டு,அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது.

top videos

    நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். மான்கள் சாலையை கடக்கும் பகுதியில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. சரணாலயத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தன்னார்வ ஆர்வலர்கள் நியமிக்கப்பட்டு, மான்கள் நடமாடும் குறித்த தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு அவ்வப்போதும் மான்கள் குறித்தான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Tirunelveli