தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம், திருநெல்வேலி மாவட்டம் சாந்திநகர் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. இந்த முகாமை நெல்லை மாநகராட்சி 8வது வார்டு உறுப்பினர் மேரி குமார் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனரும் மருத்துவருமான தியோஃபிலஸ் ரோஜர் தலைமை தாங்கினார். திருநெல்வேலி பன்முக மருத்துவமனை மருத்துவர் முருகன் மற்றும் பாளையங்கோட்டை கால்நடை மருத்துவமனைமருத்துவர் பழனி முன்னிலை வகித்தனர்.
கால்நடை மருத்துவர்கள் கல்பத்,அயூப்அலி,முருகேசன், கால்நடை மருத்துவ மாணவர்கள் ஷிரின் மற்றம் ஸம்ஸம், கால்நடை முதுநிலை மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன், கால்நடை ஆய்வாளர் ரமேஷ் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஜெகதீசன், லாசர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு வெறிநோய் தடுப்பூசி செலுத்தியது. இம்முகாமில் 130 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது குறித்து திருநெல்வேலி மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனரும் மருத்துவருமானதியோஃபிலஸ் ரோஜர் கூறுகையில், மனித சமுதாயம் இன்று எதிர்கொள்கின்ற பயங்கர நோய்களில் ஒன்று வெறிநோய்.
ஆண்டொன்றுக்கு சற்று குறைந்து மதிப்பிட்டால் கூட 50,000 மனித உயிர்கள் பலி கொல்கிறது இந்த வெறிநோய் என்று தெரியவந்துள்ளது. வெறி நோயானது நாய் இனங்களில் இரண்டு வகைகளாக வெளிப்படுத்தப்படுகின்றது.
ஒன்று ஊமைத்தனமானது மற்றொன்று மூர்க்கத்தனமானது. நாய் கடித்தால், உடனே கடிப்பட்ட இடத்தை முதலில் நன்றாக நீர் விட்டு கழுவ வேண்டும். அதனைத் தொடர்ந்து, விரைவாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.
கடிபட்ட இடத்தில் கட்டு கட்டுதல் கூடாது. வெறி நோய்க்கு எதிராக தடுப்பூசி போடுவதன் மூலம் நாம் வெறிநோய் பரவலை தடுக்கலாம் என அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nellai, Pet animals, Tirunelveli