முகப்பு /திருநெல்வேலி /

"கண்டா வர சொல்லுங்க" டிஜிட்டல்  முறையில் மீண்டும் தோன்றும் ஊமைத்துறை.. மகிழ்ச்சியில் நெல்லை மக்கள்!

"கண்டா வர சொல்லுங்க" டிஜிட்டல்  முறையில் மீண்டும் தோன்றும் ஊமைத்துறை.. மகிழ்ச்சியில் நெல்லை மக்கள்!

X
ஊமைத்துறை

ஊமைத்துறை

Oomaithurai museum | ஆங்கிலேயர்களால் சிறை வைக்கப்பட்ட ஊமைத்துறை அதே இடத்தில் டிஜிட்டல் முறையில் மீண்டும் தோன்றியது பொதுமக்களை சிலிர்ப்படைய செய்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli | Tirunelveli

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு அரிய வகை பொருட்கள் பழங்காலத்து போர் கருவிகள், பீரங்கி குண்டுகள், ஆதிச்சநல்லூரில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாலிகள், பழங்குடிகளின் இசைக்கருவிகள் என நூற்றுக்கணக்கான பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகம் அமையப்பெற்று இருக்கும் இடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாளையக்காரர்களின் கிழக்கு கோட்டையாக இருந்தது. கோட்டையின் ஒரு பகுதி சிறை கூடமாக இருந்தது. அங்கு சிறை வைக்கப்பட்டவர் தான் இன்று இந்த இடத்திற்கு பெருமதிப்பிற்கு காரணமாக அமைந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துறை.

தற்போது இந்த ஊமைத்துறை சிறை கூடமானது டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது . பாளையங்கோட்டை பகுதி சுதந்திரத்திற்கு முன்பு பாளையக்காரர்களால் ஆளப்பட்டு வந்தது.

சுதந்திரத்தின் போது பாளையக்காரர்களை ஒன்றிணைத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருக்கு துணையாக நின்று மிகவும் போர்யுக்திகளை சிறப்பாக கையாண்டவர் அவரின் தம்பி ஊமைத்துறை.

சுதந்திரப் போரில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட பிறகு கைது செய்யப்பட்டவர் ஊமைத்துறை இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ள சிறை கூடத்தில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்றதை டிஜிட்டல் தொழில்நுட்ப திரையில் பார்க்கும்போது புல்லரிக்க செய்கிறது.

First published:

Tags: Local News, Nellai, Tirunelveli