அந்துப் பூச்சி என்பது, வண்ணத்து பூச்சி போன்ற உயிரினம் ஆகும். அந்து பூச்சிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் வருகின்றன. சில அந்து பூச்சிகள் மட்டும் காலை நேரத்தில் வருகின்றன. அந்து பூச்சிகள் ஒவ்வொரு நிலப்பரப்பில் எந்த மாதிரி வாழ்கின்றன. அதன் வகைகள் என்ன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார் நெல்லையைச் சேர்ந்த அந்துப்பூச்சி ஆராய்ச்சியாளர் தளவாய் பாண்டி.
குறைவான எண்ணிக்கையில் உள்ள அந்து பூச்சி குறித்து நம்மிடம் தளவாய் பாண்டி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “அந்து பூச்சி குறித்து 2018ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஆராய்ச்சி செய்து வருகிறேன். ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் அந்து பூச்சி குறித்து கணக்கெடுத்து வருகிறேன்.
மணிமுத்தாறு தாமிரபரணி நதிக்கரை வயல்வெளிகளில் அந்து பூச்சி குறித்து கணக்கெடுப்பை நடத்தி வருகிறேன். காட்டுப்பகுதிகளில் இருக்கும் அந்து பூச்சி வயல்வெளிகளில் இருக்காது. வயல்வெளிகளில் இருக்கும் அந்து பூச்சி காட்டுப்பகுதியில் இருக்காது. மணிமுத்தாறில் 5 ஏக்கரில் 500 வகையான அந்து பூச்சிகளை கடந்த 2018ம் ஆண்டு முதல் பதிவு செய்துள்ளேன்.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அந்து பூச்சிகளை பதிவு செய்துள்ளேன். தேனீக்களுக்கு பிறகு அந்து பூச்சிகள் தான் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய பயனுள்ளதாக இருந்து வருகிறது. உணவுச் சங்கிலியின் முக்கியமான பங்கு வகிக்கிறது. அந்து பூச்சியை யாரேனும் பார்த்தால் அதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அந்து பூச்சிகள் அதிக வெளிச்சம் உள்ள இடங்களில் இரவு நேரங்களில் இருப்பதால் மற்ற உயிரினங்களால் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவற்றை தவிர்ப்பதால் அந்து பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். சில தினங்களுக்கு முன்பு புது வகையான அந்து பூச்சியை பதிவு செய்தோம். அது 127 வருடங்களுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட ஒரு வகையான அந்து பூச்சியாகும். அந்து பூச்சிகள் அழுகிய பழங்கள், அழுகிய விலங்கின் உடல்கள் விலங்கின் கண்ணீரை உறிஞ்சி குடிக்கும். அந்து பூச்சிகள் பல்வேறு வகையில் காணப்படுகின்றன. அந்து பூச்சிகள் அதிக அளவில் ஒரு பகுதியில் இருந்தால், அந்த இடம் வளமாக இருப்பதாக அர்த்தம்" இவ்வாறு தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli