முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம்.. திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்..

நெல்லை வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம்.. திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்..

X
நெல்லை

நெல்லை வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா

Varadaraja Perumal Temple Chariot Festival : நெல்லை வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்தனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவின் 9ம் நாளான மே 11ம் தேதி சிகர நிகழ்வான தேர்த்திருவிழா நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு மேலவீரராகவபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோத்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவையொட்டி கோவிலில் காலையில் சிறப்பு திருமஞ்சனம் கொடியேற்றத்திற்கு பின்பு, மகா தீபாரணை நடைபெற்றது. மாலையில் அன்ன வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வந்தார். திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மே 4ம் தேதி சிம்ம வாகனத்திலும், 5ம் தேதி ஹனுமன் வாகனத்தில் ராமர் திருக்கோலத்திலும் 6ம் தேதி சேஷ வாகனத்திலும் பெருமாள் வீதி உலா வந்தார்.

நெல்லை வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா

இதனைத்தொடர்ந்து இந்த மாதம் 7ம் தேதி இரவு 10 மணிக்கு வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும், ஆண்டாள் அன்ன வாகனத்திலும் வேதவல்லி தாயார் சேஷ வாகனத்திலும், நம்மாழ்வார் வெள்ளி தோளுக்கியானிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். மேலும் 8ம் தேதி யானை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், 9ம் தேதி இந்திர வாகனத்தில் வீதி உலா வந்தார்.

இதையும் படிங்க : மேலும் அழகாகும் ஊட்டி தாவரவியல் பூங்கா.. சீரமைப்பு பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரம்..

இந்நிலையில், திருவிழாவின் 8ம் நாளான மே 10ம் தேதி பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வீதி உலா வந்தார். முதலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்வாக மே 11ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்ற பின்பு, நான்கு மாத வீதிகள் வழியாக தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

மே 12ம் தேதி நண்பகல் 12 மணிக்கு வரதராஜப் பெருமாளுக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. மே 13ம் தேதி மாலை 4 மணிக்கு புஷ்ப யாகம் திருவாராதனை சாற்றுமுறை கோஷ்டி நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tirunelveli