முகப்பு /திருநெல்வேலி /

‘தனுஷ் படம் இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கல..’ - நெல்லை ரசிகர்களின் வாத்தி மூவி ரிவ்யூ

‘தனுஷ் படம் இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கல..’ - நெல்லை ரசிகர்களின் வாத்தி மூவி ரிவ்யூ

X
வாத்தி

வாத்தி ரிவ்யூ

Vaathi Movie First Review | திருநெல்வேலியில் உள்ள திரையரங்குகளில் தனுஷின் வாத்தி படம் வெளியானது. நேற்று இரவே அவரது ரசிகர்கள் திரையரங்குகளின் முன்பு கட்டவுட் உள்ளிட்டவற்றை வைத்து அசத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படத்துக்கு திருநெல்வேலி ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர். படம் சூப்பராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருச்சிற்றம்பலம் படம் வெற்றிக்குப் பின் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் வாத்தி. ஜீ.வி.பிரகாஷின் பாடல்கள் தந்த எதிர்பார்ப்பில், படம் இன்று வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ் ஆடியன்ஸ் என பலரும் வாத்தி படத்துக்கு ட்விட்டரில் ரிவியூ பதிவிட்டு வருகின்றனர்.

தியேட்டரில் வைக்கப்பட்ட பேனர்கள்

இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள திரையரங்குகளில் தனுஷின் வாத்தி படம் வெளியானது. நேற்று இரவே அவரது ரசிகர்கள் திரையரங்குகளின் முன்பு கட்டவுட் உள்ளிட்டவற்றை வைத்து அசத்தினர். இன்று காலை 8 மணி அளவில் முதல் ஷோ திரையிடப்பட்டது.

தியேட்டரில் வைக்கப்பட்ட பேனர்கள்

இதில் தனுஷின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் சென்று படத்தை பார்த்து ரசித்தனர். படம் முடிந்து வெளியே வந்த ஆசிரியர் பல்ராம் கூறுகையில், ‘தானும் ஆசிரியர் என்ற முறையில் இப்படத்தை பார்த்தேன். மிகச் சிறப்பாக தனுஷ் நடித்துள்ளார். சென்டிமென்ட் மிக அழகாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது என்றார்.

வழக்கறிஞரை துரத்தி, துரத்தி வெட்டிய மர்ம நபர்.. நெல்லையில் சினிமாவை மிஞ்சும் பயங்கரம்

தொடர்ந்து பேசிய சுசின், விக்னேஷ் மணிகண்டன் ஆகியோர் எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படம் எடுத்துள்ளனர். இந்த படம் இவ்வளவு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. பைட், ரொமான்ஸ் அனைத்தும் அருமையாக உள்ளது என்றனர்.

First published:

Tags: Local News, Tirunelveli