முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் 2 நாள் தொழில் பயிற்சி முகாம் - இன்று முதல் தொடக்கம்!

நெல்லையில் 2 நாள் தொழில் பயிற்சி முகாம் - இன்று முதல் தொடக்கம்!

2 நாள் தொழிற்பயிற்சி

2 நாள் தொழிற்பயிற்சி

நெல்லையில் இரண்டு நாள் தொழில் பயிற்சியை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ண மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இன்றும் (1-ம் தேதி) நாளையும் (2-ம் தேதி) இரண்டு நாட்கள் தொழிற்பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் மக்களுக்கு இரண்டு நாள் தொழில் பயிற்சி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 1.5.2023 மற்றும் 2.5.2023 ஆகிய இரண்டு நாட்கள் தொழிற்பயிற்சி பாளைகோட்டை தெற்கு வாசல் பஜார் அரசடி பிள்ளையார் கோயில் பின்புறம் உள்ள மேடை போலீஸ் ஸ்டேஷனில் நடைபெறவுள்ளது.

பயிற்சியாக சாயம் போடுதல் மற்றும் அச்சு பதித்தல் பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பிற்கு செய்முறைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும். பொருட்களுக்கான கட்டணமாக ரூபாய் இருபது மட்டும் செலுத்தினால் போதும்.

இப்பயிற்சி வகுப்பை மத்திய அரசு நெசவுத் துறை ஆய்வு துறையில் அதிகாரியாக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி வழங்குகிறார். கலைஞர் பாலசுப்பிரமணியன் மண்பாண்டம் பொருட்கள் செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ண மூர்த்தி, மே-1 ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் பயிற்சியை துவக்கி வைக்கிறார்கள். பள்ளி,  கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Tirunelveli