நெல்லை மாவட்டத்தில் முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சமூகத்தில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி, தனது சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி திருநங்கையர் தினம் நடைபெறுகிறது.
அன்றைய தினம் திருநங்கையருக்கான முன்மாதிரி விருதும், ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளன. இதற்கான தகுதிகளான திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது 5 திருநங்கையருக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதற்கு வருகிற 28ஆம் தேதிக்குள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான கையேடு தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும். அந்த கையேட்டில் கலெக்டர், சமூக நல அலுவலரின் பரிந்துரை கடிதம், சுயசரிதை, சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படங்கள், பத்திரிகை செய்தி தொகுப்பு, சேவைக்கான விரிவான அறிக்கை, அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று உள்ளிட்ட 14 வகையான விவரங்களை கொண்டு கையேடு தயாரித்து தமிழில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்களை அனுப்ப வேண்டும்.
Must Read : திருநெல்வேலி பகுதியில் உள்ள சிறப்புவாய்ந்த நவகைலாய கோவில்கள் பற்றி தெரியுமா?
இவற்றை பாளையங்கோட்டை திருவனந்தபுரம் ரோடு வ.உ.சி. மைதானம் எதிரில் சுப்பிரமணியபுரம் தெருவில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli, Transgender