முகப்பு /திருநெல்வேலி /

காரையாறு அணை, சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

காரையாறு அணை, சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

சொரிமுத்து அய்யனார் கோயில்

சொரிமுத்து அய்யனார் கோயில்

Tirunelveli Sorimuthu Ayyanar Temple | சொரிமுத்து அய்யனார் கோயில், காரையாறு அணை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு செல்ல எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் காரையாறில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (மார்ச் 27) முதல் மார்ச் 30 ஆம் தேதி வரை காரையாறு அணை, சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்தில் பாபநாசம் முண்டந்துறை வனச்சரகங்கள் இயற்கை சுற்றுலா பகுதிகளாக விளங்குகின்றன. பாபநாசம் பகுதியில் அகஸ்தியர் அருவி கீழணையும், முண்டந்துறை பகுதியில் சேர்வலாறு, காரையாறு அணைகள், கானி குடியிருப்புகள், சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்டவையும் உள்ளன.

பாபநாசம் வனச் சோதனை சாவடியில் இருந்து காரையாறு அணை வரையிலான 14 கிலோமீட்டர் தார் சாலை நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த சாலை பழுதானதால் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாபநாசம் முதல் முண்டந்துறை வரை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை புதிதாக அமைக்கப்பட்டது .

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில்

இந்நிலையில் முண்டந்துறை முதல் காரையாறு வரையிலான 4 கிலோமீட்டர் சாலை பராமரிப்பு பணி மார்ச் 27 முதல் 30 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனால் இந்த 4 நாட்களும் சொரிமுத்து அய்யனார் கோயில், காரையாறு அணை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு செல்ல எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை எனவும் மாணவர்களின் வசதிக்காக காலை, மாலை நேரங்களில் அரசு பேருந்து மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tirunelveli